சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு...
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட 1,200 கன அடி தண்ணீர் இன்றிரவு தமிழக எல்லையான ஜூரோ பாயிண்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் படி, ஆண்டுதோறும் 2 தவணையாக தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் கண்டலேறு அணையில் இருந்து 7.5 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்த 25-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் பயணித்து இன்றிரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடையும் என கூறப்படுகிறது.
Comments