புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே கார்குண்டு மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் இன்று வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
புல்வாமா மாவட்டம் லேத்போராவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார்குண்டு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதேபோன்ற தாக்குதல் சதித் திட்டத்துடன் காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு பயங்கரவாதி ஒருவன் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்ததின்பேரில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ராஜ்போரா (Rajpora) பகுதியில் அந்த காரை கண்டுபிடித்து பாதுகாப்புப் படையினர் நிறுத்தியபோது, அதிலிருந்த பயங்கரவாதி தப்பியோடி விட்டான். இதையடுத்து காரில் இருந்த வெடிகுண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
The suspected vehicle came and a few rounds of bullets were fired towards it. Going a little further the vehicle was abandoned and the driver escaped in the darkness. On closer look, the vehicle was seen to be carrying heavy explosives in a drum on the rear seat. https://t.co/HbsT6hYE1u
— ANI (@ANI) May 28, 2020
Comments