குடிநீருக்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர், மதுரை வந்தடைந்தது

0 1420
குடிநீருக்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர், மதுரை வந்தடைந்தது

குடிநீர் தேவைக்காக வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை வந்தடைந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரானது மதுரை கல்பாலம் வந்தடைந்தது.

கல்பாலத்தில் வைகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றவதை பலர் ஆர்வத்துடன் பார்த்துச சென்றனர். இரண்டாவது நாள் வினாடிக்கு 850 கன அடி வீதமும், மூன்றாவது நாள் வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தண்ணீர் மூலம், மதுரை மாவட்டத்தில் வைகையாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உரைகிணறுகள் மற்றும் கரையோரம் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments