நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூன் 15-ம் தேதி தொடங்குகிறது

0 1753
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூன் 15-ம் தேதி தொடங்குகிறது

நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு ஆன்லைனில் ஜூன் 15-ம் தேதி தொடங்குகிறது.

பள்ளிக் கல்வித்துறை, Amphisoft Technologies ebox உடன் இணைந்து, இலவச ஆன்லைன் நீட் பயிற்சி வழங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இதற்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தில் மாணவர்கள் வரும் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவங்கும். தலைமை ஆசிரியர்கள் மூலம் இதுதொடர்பாக, மாணவர்களுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments