வெட்டுக்கிளியால் பேரழிவும்.... பெரும்பாதிப்பும்....

0 2777
வெட்டுக்கிளியால் பேரழிவும்.... பெரும்பாதிப்பும்....

கொரோனாவுக்கு அடுத்தபடியாக பல்வேறு நாடுகளில் பேரழிவையும், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் எங்கிருந்து வந்தன... எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு

 செங்கடலின் இருபுறமும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், சௌதி அரேபியா, யேமன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதிக்கின்றன. தனிமையாக இருக்கும் போது எங்காவது மறைந்து வாழும் இந்த வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் ஒரு நாட்டையே துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டவை.

ஈரப்பதமான காற்று, லேசான குளிரான பகுதி, இவையே பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு ஏற்ற காலநிலை. தற்போது இதுபோன்ற காலநிலைதான் வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்குக் காரணம். அகோரப் பசி கொண்ட வெட்டுக்கிளிகள் தனது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத எந்தத் தாவரத்தையும் விட்டு வைப்பதில்லை. 

 ஒரு பெருந்திரள் கூட்டத்தில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் வரை இருக்கக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில கிலோ மீட்டர் பரப்பளவில் மொத்தமாகச் செல்லும் இவை, நாளொன்றுக்கு 200 கிலோ மீட்டர்கள் பறந்து சென்று பேரழிவை ஏற்படுத்தும். நடுத்தர எண்ணிக்கையில் இருக்கும் வெட்டுக்கிளிக் கூட்டம் 2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்த்து விடும் என்கிறது ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால்தான் நடப்பாண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான்கூட அவசரநிலையைப் பிரகடனம் செய்ததும். சோமாலியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள் தேசிய நெருக்கடியை அறிவித்ததும் நினைவிருக்கலாம். எரித்திரியாவில் 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 மில்லியன் டன் உணவுப் பொருளை ஒரே நாளில் தின்று தீர்த்த இந்த வெட்டுக்கிளிக் கூட்டம், கென்யாவில் 40 முதல் 60 கிலோ மீட்டர் பரப்பளவில் பயிர்களை சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments