மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை...

0 2189
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை...

கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை - தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்கள் தோறும் கொரோனாவின்பாதிப்பு நிலவரம், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து, விவாதிக்கப்படும்.4 - வது கட்ட ஊரடங்கு வருகிற 31 ம் தேதி முடிவடையும் சூழலில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments