ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தினால் இதயநோய் பிரச்சனை வருவதாக பெல்ஜியம் அரசு தகவல்

0 1868
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தினால் இதயநோய் பிரச்னை வருவதாக பெல்ஜியம் அரசு தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மலேரியா மருந்தான ஹைட்ரோக்ஸி குளோரோகுயினை கைவிடுவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொள்ளும் கொரோனா நோயாளிகளுக்கு இதயப் பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக லான்செட் என்ற மருத்துவ இதழ் கடந்த சில நாட்களுக்கு முன் கருத்துக் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று பெல்ஜியம் சுகாதாரத்துறை அறிக்கை விடுத்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், மறு மதிப்பீடு தெரிந்த பின் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மருந்தை பயன்படுத்த பிரான்ஸ் ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments