3,543 ரயில்கள் மூலம் 48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணம்
நாடு முழுவதும் கடந்த 26 நாட்களில் 3 ஆயிரத்து 543 ரயில்கள் மூலம் சுமார் 48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக ரயில் சேவையைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரத்து 543 ரயில்கள் மூலம் சுமார் 48 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாகவும், அவ்வாறு சென்றவர்களுக்கு 78 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவுப் பொட்டலங்களும், ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு தண்ணீர் பாட்டில்களும் ஐ ஆர் சி டி சி மூலம் விநியோகிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1/3 Over 3500 Shramik special trains have been originated till now by Indian Railways carrying more than 48 lac passengers. Nearly 80% of total Shramik trains are destined for various destinations in Uttar Pradesh and Bihar.
— Ministry of Railways (@RailMinIndia) May 27, 2020
Comments