மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்க என பிரதமருக்கும் அமித் ஷாவுக்கும் மம்தா பானர்ஜி கோரிக்கை

0 13776
மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்க

மேற்கு வங்கத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாததால் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்த மம்தா, கொரோனோ வைரஸ் எங்கே இருந்தாலும் பரவாமல் அதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமித் ஷாவுடன் தாம் தொலைபேசியில் பேசியபோது மேற்கு வங்க அரசு நிலைமையை சரியாக கையாளவில்லை என்று கருதினால் 'பிரதமரும் நீங்களும் வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்' என்று தாம் கூறியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமித்ஷா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கூறியதாக மம்தா தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். இந்த பதிலுக்காக அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மம்தா கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments