தெலங்கானாவில் 120அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை, 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது.
மேடக் மாவட்டம் பப்பனமேட் பகுதியில் ( Papannapet)உள்ள விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு மூடப்படாமல் கிடந்தது. அதன் அருகே தனது தந்தை, தாத்தா ஆகியோருடன் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த சாய்வர்தன் என்ற குழந்தை உள்ளே தவறி விழுந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் மீட்புக் குழுவினர் விரைந்து, அதை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஸன் செலுத்தப்பட்ட வேளையில், பக்கவாட்டில் அதை சுற்றிலும் குழியும் தோண்டப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. எனினும் அந்த முயற்சிக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இன்று காலை அக்குழந்தை, 17 அடி ஆழத்தில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
Telangana: Body of the 3-year-old boy Sai Vardhan, who fell into a borewell y'day in Medak, found 17 feet deep inside it. His body has been taken to a hospital. Collector, Medak, K Dharma Reddy says, "There were 3 borewells dug without permission. Necessary action will be taken." https://t.co/L8xb4nYPTv pic.twitter.com/Wvz3bFKD3L
— ANI (@ANI) May 28, 2020
Comments