பெண் போலீஸ் பிரேமம் ..மிரட்டும் பிளாக் மெயிலர் ..! ஏழரை சனியால் அமைதியாம்
காதலில் விழுந்த பெண் போலீசிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, திருப்பிக் கொடுக்க மறுத்து ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக பிளாக் மெயில் செய்யும் முகநூல் செய்தியாளரை போலீசார் தேடி வருகின்றனர். காவல் பணியை மறந்து காதல் தேடிய பெண் போலீசுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....
நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் தங்கராணி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த சிவ பிரேம்குமார் என்பவரை காதலித்துள்ளார்.
மளிகைகடைவைத்துக் கொண்டு தன்னை முக நூல் செய்தியாளர் என்று சுற்றிவந்த சிவ பிரேம்குமாருடன் தங்கராணி சுமார் 4 வருடம் பழகிய நிலையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அவருடன் நெருக்கமாக இருந்த நேரத்தில் வங்கியில் தன் பெயரில் 7 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராணியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட முகநூல் செய்தியாளர் சிவ பிரேம்குமார் அவரது 7 லட்சம் ரூபாயை திருப்பிகொடுக்க முடியாது என்றும் பணத்தை கேட்டு தொல்லை செய்தால் இருவரும் தனிமையில் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பிளாக் மெயில் செய்து மிரட்டி வருவதாக ராதாபுரம் காவல் நிலையத்தில் தங்கராணி புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான சிவபிரேம் குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே தங்கராணியின் உறவினரிடம் பேசிய சிவ பிரேம்குமார், தான் தங்கராணியை திருமணம் செய்யவில்லை என்றும் பல ஊர்களுக்கும் அழைத்துச்சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்
தங்கராணி, தன்னை காதலித்து சுற்றி வந்ததால் தான் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொண்ட சிவ பிரேம்குமார் தனக்கு தெரியாத போலீஸ் அதிகாரிகளே இல்லை என்பது போல பேசியுள்ளார்.
மேலும், தன் மீது பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இந்த வழக்கு எல்லாம் தன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்றும் சவால் விட்டுள்ளார் சிவ பிரேம்குமார்
அரியாத வயதில் வயது கோளாறால் காதலில் விழுந்து சிக்கித்தவிக்கும் சில பெண்கள் மத்தியில் பொறுப்பான போலீஸ் வேலையில் இருந்து கொண்டு காதலில் விழுந்து, கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்ததால், பிளாக் மெயிலரிடம் சிக்கி சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பெண் போலீஸுக்கு எதிராகவே இவ்வளவு கடுமையான வார்த்தைகளால் மிரட்டும் பிளாக்மெயிலர் சிவ பிரேம் குமார் கையில் சாமானிய பெண்கள் சிக்காமல் தடுக்க அவர் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Comments