உலகை உலுக்கும் கொரோனா... உயரும் பாதிப்புகளால் அச்சம்...!
உலகை உலுக்கும் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு அச்சம் தரும் வகையில் உயர்ந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்து 64 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் எல்லாம் முழு வீச்சில் களமிறங்க,உயிர்ப்பலியும், பாதிப்புகளும் கணிசமாக உயர்ந்து வருகிறது.அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 436 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 147 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக,அங்கு 807 பேர் உயிரிழந்தனர்.ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 338 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகி, கடந்த 24 மணி நேரத்தில் 412 பேரை, கொரோனா காவு வாங்கி விட்டது.
ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளிலும் பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.ஈரானில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 80 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு 56 பேர் பலியாயினர்,சீனாவில், கொரோனா உருவான உகான் நகரில் மேலும் 36 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அங்கு, ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு கொரோனா
பரிசோதனை நடத்தப்பட்டு வரும் சூழலில், இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உலகை உலுக்கும் கொரோனா... உயரும் பாதிப்புகளால் அச்சம்...! #Covid19 | #CoronaVirus | #CoronaVirusUpdate https://t.co/5pwrMDFAwR
— Polimer News (@polimernews) May 28, 2020
Comments