ஜூன் 1க்குப் பின்னர் ஊரடங்கு தளர்வா நீட்டிப்பா?
நாடு தழுவிய ஊரடங்கு நான்காம் கட்டம் அமலில் உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் அது முடிய உள்ளது.
இந்நிலையில் ஜூன் 1 ம் தேதி முதலான தளர்வுகள் குறித்து பிரதமர் மோடியின் அலுவலக மூத்த அதிகாரிகளும் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.64 நாள் ஊரடங்கால் ஏற்பட்ட பலன்களையும் இரு அமைச்சகங்களும் ஆராய்ந்து வருகின்றன.
60 நாட்கள் ஊரடங்கில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மாநில அரசுகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கடந்த முறை 15 நாட்களுக்கு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட போதும் தொழில்துறையினர் , கடைகள், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு மத்திய மாநில அரசுகள் ஏராளமான தளர்வுகளை அறிவித்தன.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களில் பேருந்து போக்குவரத்தும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்த முடிவும் மாநில அரசுகளிடமே விடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 6 லட்சம் பேரும் குஜராத்தில் 4 லட்சம் பேரும் உத்தரப்பிரதேசத்தில் 3 லட்சம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கடந்த 12 நாட்களில் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
Comments