இந்திய - சீன எல்லைத் தகராறைப் பேசித் தீர்க்கத் தயார் என டிரம்ப் அறிவிப்பு
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க நடுநிலையாக இருந்து உதவத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே எல்லைத் தகராறு காரணமாக இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. சீன அதிபர் சி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்தினரைத் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய - சீன எல்லைத் தகராறைத் தீர்க்க நடுநிலையாக இருந்து உதவத் தயார் என இரு நாடுகளிடமும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே காஷ்மீர்ப் பிரச்சனையைத் தீர்க்க உதவுவதாக அமெரிக்கா கூறியபோது, இருநாடுகளிடையான பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க விரும்பவில்லை எனக் கூறி இந்தியா மறுத்துவிட்டது குறிப்பிடத் தக்கது.
Comments