மிரட்டும் கொரோனா மிரளும் சென்னை விரட்டும் பணி தீவிரம்
அடங்க மறுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் பேரில், சென்னையில் மட்டும் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கொரோனா காவு வாங்கிய 133 பேரில், சென்னையைச்சேர்ந்த 95 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ,
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 558 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் ஒரே நாளில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, செங்கல் பட்டில் 31 பேரும், காஞ்சியில் 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலையில் 13 பேரும், திருவாரூரில் 5 பேரும் பாதிக்கப்பட, திருச்சியில்3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கடலூர், தூத்துக்குடியில் தலா 2 பேருக்கு தொற்று உறுதி ஆக, கள்ளக்குறிச்சி, மதுரை, நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருப்பத்தூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .
சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 307 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 5 ஆயிரத்து 800 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 817 பேரில், ஒரு மாத இரு பெண் குழந்தைகள் உள்பட மொத்தம் 3 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த 133 பேரில், 95 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 10 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது.
மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தபோதிலும், கொரோனாவின்கிடுக்கிப்பிடி, சென்னையை இறுக்கி வருகிறது.
மிரட்டும் கொரோனா மிரளும் சென்னை விரட்டும் பணி தீவிரம் | #Coronavirus | #Covid19 https://t.co/Vkor7bm2bT
— Polimer News (@polimernews) May 27, 2020
Comments