கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது

0 2295
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதால், இதுவரை 32 லட்சத்து 42 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதால், இதுவரை 32 லட்சத்து 42 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

435 அரசு ஆய்வகங்கள், 189 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 624 ஆய்வகங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. செவ்வாய்கிழமை ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 42.4 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் விகிதம் 6.36 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் 2.86 சதவீதம் என்ற குறைந்த அளவில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments