வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்
மதுரை அருகே எஜமானரை காப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த பாம்பை, செல்லநாய் கடித்து கொன்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடல்நகர் பகுதியை சேர்ந்த ஜோப்ரியல் என்பவர், டாபர்மேன் வகை நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பை பார்த்த செல்லநாய், அதனுடன் நீண்ட நேரம் சண்டையிட்டு மேற்கொண்டு வீட்டினுள் செல்லாமல் தடுத்ததுடன், இறுதியில் கடித்து குதறி கொன்றது.
நீண்ட நேரமாக நாய் குறைத்துக் கொண்டே இருந்ததை அறிந்து வெளியே வந்த ஜோப்ரியல், பாம்பு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் நாயின் உடலிலும் பாம்பு கடித்த காயங்கள் இருந்ததால், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Comments