சிவகங்கை: கொந்தகை அகழாய்வு தளத்தில் ஆய்வு பணிகள் மீண்டும் துவக்கம்

0 1692

சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழடி ஆறாவது கட்ட அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார்.

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் அண்மையில் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட அகழாய்வு பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

நான்கு தொல்லியல் அலுவலர்கள் மற்றும் 5 தொல்லியல் துறை மாணவர்கள் உட்பட 30 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments