அயனாவரம் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி தற்கொலை
சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி, புழல் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி பழனி என்பவர், கழிவறையின் பின்புறம் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன உளைச்சல் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments