அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
முன்னதாக Minneapolis காவல்துறையை சேர்ந்த அதிகாரி, 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதரின் கழுத்தில் முழங்காலால் அழுத்தியதில், அவர் உயிர் இழந்தார்.
இது தொடர்பாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போதும், நூற்றுக்கணக்கானோர் அவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் ஆர்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
Comments