ஊரடங்கால் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிப்பு
ஊரடங்கு மற்றும் இதர கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காற்றில் கரியமில வாயு இந்த அளவிற்கு குறைவது இதுவே முதல் தடவை என்று அந்த அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டால் ஆண்டு இறுதியில், கடந்த ஆண்டை விடவும் 7 சதவிகிதம் அளவிற்கு காற்றில் கரியமில வாயு குறையும் என்றும் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் 4 சதவிகித குறைவை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற மாதம் இந்தியா 26 சதவிகிதம் கரியமில வாயு மாசை குறைத்துள்ளது. அமெரிக்கா, சீனா ஆகியன சுமார் 30 சதவிகிதம் என்ற அளவிற்கு கரியமில வாயு வெளியீட்டை குறைத்துள்ளன.
Comments