கடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு
கடன் தள்ளி வைப்புக் காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பொதுமக்களும் நிறுவனங்களும் பெற்ற அனைத்து வகைக் கடன்களையும், கடனுக்கான தவணைகளையும் செலுத்துவது ஆகஸ்டு 31 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தள்ளி வைக்கப்பட்ட தவணைகள் இறுதியில் நீட்டிக்கப்படும் என்றும், தள்ளி வைக்கப்பட்ட காலத்துக்கு வட்டி கணக்கிடப்பட்டு இறுதித் தவணைக்குப் பின் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட 6 மாதக் காலத்துக்கும் வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பதிலளிக்க அவற்றுக்கு அறிவிக்கை அனுப்பும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments