கள்ளத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தப்பியவர்களை 4 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த போலீசார்
ராணிப்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தப்பிய இருவரை திரைப்பட பாணியில் காவல்துறையினர் 4 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து வேலூர் நோக்கி காரில் வந்த இருவர், ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மர்மநபர்கள் சிலரிடமிருந்து பார்சல் ஒன்றை பெற்றுக்கொண்டு மீண்டும் சென்னை நோக்கி வேகமாக புறப்பட்டனர். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்று வி.சி.மோட்டூர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.
காரில் 9 மி.மீ கள்ள கைத்துப்பாக்கியுடன் 3 தோட்டாக்களும் இருந்ததும் தெரியவந்தது. போலிசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த ராமு, செங்காடு பகுதியில் கிரஷர் நடத்தி வருவதும், உள்ளூரில் கொலை மிரட்டல் இருப்பதால் பிஹார் மாநில நாட்டு கைத்துப்பாக்கி தேவா என்பவர் மூலமாக வாங்கியது தெரியவந்ததால் கைது செய்தனர்.
கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாக வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேலூர் மாவட்ட செயலாளராரும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவருமான தேவா என்பவரை கைது செய்தனர்.
Comments