இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மோசமான காலத்தில் நடைபெறும் தீவிரமான பூச்சித் தாக்குதல்-சுற்றுச்சூழல் துறை
இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மோசமான காலத்தில் நடைபெறும் தீவிரமான பூச்சித் தாக்குதல் எனச் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை அழிப்பதால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலங்கள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவிய காலத்தில் வெட்டுக்கிளிகளும் பேரழிவை ஏற்படுத்துவது மோசமான காலக்கட்டத்தில் நடைபெறும் மிகத் தீவிரமான பூச்சித் தாக்குதல் எனச் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து வடகிழக்கு நோக்கிக் காற்று வீசுவதால் வெட்டுக்கிளிகள் கூட்டம் டெல்லியை நோக்கிச் செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
#LocustAttack: All you need to know about the agricultural threat looming over India. Get all your questions answered here.https://t.co/aKSMwZUrKG
— India.com (@indiacom) May 26, 2020
Comments