கர்நாடகாவில் அனைத்துக் கோவில்களையும் ஜூன் 1 முதல் திறக்க அனுமதி
ஜூன் முதல் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்து 500 கோவில்களைத் திறப்பதற்கு கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் பூஜாரி, முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜூன் முதல் தேதியில் இருந்து கோவில்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவில்களில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும் சூழ்நிலைக்கேற்ப இதர முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கோவில்களை திறக்க அனுமதித்துள்ளதால் மத பாகுபாடின்றி மசூதிகளையும் தேவாலயங்களையும் திறக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கர்நாடக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments