கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று முக்கிய ஆலோசனை
மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
அந்த மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை விலக்குவது தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இதுகுறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடாது என்பது போல ராகுல் காந்தி பேசியதும் கருத்து வேறுபாட்டை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சித் தலைவர்களுடன் உத்தவ் ஆலோசனை நடத்தவுள்ளார்
Comments