ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

0 11103
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்குப் பதில், தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்குப் பதில், தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிப் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தாங்களே ரத்த வாரிசுகள் என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

இந்த வழக்கில் காணொலியில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதற்குப் பதில் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றி விட்டு, மீதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தனர். தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

அத்துடுன் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தனர். ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொண்டு அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments