செவ்வாயன்று உலகிலேயே அதிக வெப்பம் பதிவான ராஜஸ்தானின் சுரு
செவ்வாயன்று உலகிலேயே அதிக வெப்பம் பதிவாகிய முதல் 15 இடங்களில் 10 இந்தியாவிலும் 5 பாகிஸ்தானிலும் உள்ளன.
ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பரவியுள்ள தார்ப் பாலைவனப் பகுதியே செவ்வாயன்று உலகிலேயே அதிக வெப்பம் நிலவிய பகுதியாகத் திகழ்ந்துள்ளது.
ராஜஸ்தானின் சுரு, பாகிஸ்தானின் ஜேக்கபாபாத் ஆகிய இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. உலகில் அதிக வெப்பம் நிலவிய 10 நகரங்கள் இந்தியாவிலும், 5 நகரங்கள் பாகிஸ்தானிலும் உள்ளன. உத்தரப்பிரதேசத்தின் பாண்டா, அரியானாவின் ஹிசார் நகரங்களில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
டெல்லியில் 47 புள்ளி ஆறு டிகிரி, ராஜஸ்தானின் பிகானிரில் 47 புள்ளி நான்கு டிகிரி, கங்கா நகரில் 47 டிகிரி, பிலானியில் 46 புள்ளி ஒன்பது டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் 47 டிகிரி செல்சியசும், மகாராஷ்டிரத்தின் நாக்பூர் சோனேகானில் 46 புள்ளி எட்டு டிகிரியும், அகோலாவில் 46 புள்ளி 5 டிகிரிவெப்பம் பதிவாகியுள்ளது.
Comments