பொருளாதார மந்தநிலை காரணமாக செல்போன் ஏற்றுமதியில் சரிவு
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக நடப்பாண்டு செல்போன்களின் ஏற்றுமதி 14 விழுக்காடு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள கார்ட்னர் என்ற சர்வதேச நிறுவனம், உலகளாவிய பொதுமுடக்கம் காரணமாக, வருமானம் குறைந்து போனதால் ஏராளமானோர் மொபைல் போன்களை வாங்குவதைத் தவிக்க நினைப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதனால் உலக நாடுகளுக்கு இடையே ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 14 விழுக்காடு குறையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 5ஜி போன்கள் அறிமுகமாகும் என்றிருந்த நிலையில், மொபைல் போன்களின் ஏற்றுமதி குறையும் என்ற தகவலால் மொபைல் போன் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.
Comments