டெல்லி விமானநிலையத்தில் 18 CISF வீரர்களுக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் பணியில் இருந்த இவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 18 பேரும் விமானசேவை தொடங்குவதற்கு முன்னமே தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக தொழில்பாதுகாப்பு படை கூடுதல் ஐஜி ஹேமந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த இடத்தில் வேறு வீரர்கள் பணியில் இருப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த 132 வீரர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்ட நிலையில், 78 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
CISF reports 18 new #Covid cases in 24 hours from IGI https://t.co/7kC4pldrPp#CISF #COVID__19
— The English Post (@thenglishpost) May 26, 2020
Comments