கொரோனா சோதனைக்கு உள்நாட்டிலேயே மூலப்பொருட்கள் கிடைப்பதாக ICMR தகவல்
தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கு அதிகபட்சமாக 4,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதை மாற்றியமைக்க, மாநிலங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வைரஸ்களைக் கண்டறிவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களையே இந்தியா பெரிதும் நம்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த மூலப்பொருட்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதால், தனியார் ஆய்வகங்களிடையே போட்டி ஏற்பட்டு சோதனைக்கான தொகை குறைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments