பள்ளிகள் ,கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - உள்துறை அமைச்சகம்
பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தடையுத்தரவு நீடிக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சில மாநிலங்களில் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பல்வேறு ஊடகங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து எந்த வித முடிவும் எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட அறிவித்த தடை உத்தரவு நீடிக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Comments