போட்டி தேர்வர்கள், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக செல்போன் செயலி உருவாக்க முடிவு -TNPSC

0 1501
போட்டி தேர்வர்கள், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக செல்போன் செயலி உருவாக்க முடிவு -TNPSC

போட்டி தேர்வர்கள், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக செல்போன் செயலியை உருவாக்க முடிவு செய்துள்ள டி.என்.பி.எஸ்.சி., அதற்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

குரூப் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அமபலமானதை அடுத்து, பல்வேறு சீர்திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, தேர்வர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை ஆணையத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி உருவாக்கப்படவுள்ளது.

செல்போன் செயலியை உருவாக்க தகுதியுடைய நிறுவனங்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் தங்களது ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்கலாம் என்றும், அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.tenders.tn.gov.in அல்லது www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments