ஜூன் மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்
ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல், மே மாதங்களை போலவே ஜூன் மாதத்திற்கும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் நோய்த்தொற்று அபாயமின்றி பாதுகாப்பான முறையில் சென்றடையும் வகையில், அதற்கான டோக்கன் மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை குடும்ப அட்டை தாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் சென்று ஜூன் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments