கொரோனா நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் ரெம்டெசிவரை கொடுக்க பிரிட்டன் திட்டம்
ரெம்டெசிவர் மருந்தை குறிப்பிட்ட சில கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சோதிக்க உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவரை கொடுத்தால் நோயாளிகள் 4 நாட்களுக்கு முன்னதாகவே குணமடைந்து விடுவதாக வெளியான தகவலை அடுத்து பிரிட்டன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது, பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிகிச்சையின் போது செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்து கூட்டு மருந்தாக அளிக்கப்படும் போது நல்ல பலன் கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அதன் தயாரிப்பாளரான ஜிலேட் சயன்சஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த சோதனை சிகிச்சை முறையை மேற்கொள்ள உள்ளது.
Comments