அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருநோயாளிகள் மரத்தடியில் காத்திருந்த அவலம்

0 2372

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற சமயத்தில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரு நோயாளிகளுக்கு மாற்று அறை வழங்காமல் மரத்தடியில் காக்க வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று அபாயத்தால் மருத்துவமனையில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட போது, குடல்வால்வு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரு நோயாளிகளுக்கு மாற்று அறை வழங்கப்படாததால், அவர்களை மரத்தடியில் வைத்துக் கொண்டு உறவினர்கள் காத்திருந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments