2 மாதங்களுக்குப் பிறகு துவங்கிய உள்நாட்டு விமான சேவை.. ஒரே நாளில் 58,318 பேர் விமானப் பயணம்..!
இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் துவங்கிய உள்நாட்டு விமான சேவையில், 58,318 பேர் பயணித்ததாக, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர், நேற்று மொத்தம் 832 விமானங்கள் இயக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
திங்கள் மாலை பதிவிட்ட டுவிட்டரில் 532 விமானங்களில் 39,231 பேர் பயணம் செய்ததாக குறிப்பிட்ட அமைச்சர் செவ்வாய் நள்ளிரவு வரையிலான கணக்குகளையும் சேர்த்து புதிய புள்ளிவிவரத்தை இன்று தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட வெளிநாட்டு இந்தியர்களும் அடங்குவார்களா என்ற தகவல் வெளியாகவில்லை.
Comments