கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின், அசிதிரோமைசின் மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தும்-ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் மற்றும் அசிதிரோமைசின் ஆகிய மருந்துகள் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வந்தர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அந்த இரு மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு முன்பே பயன்படுத்தியவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஹைடிராக்சி குளோரோகுயின் மற்றும் அசிதிரோமைசின் மருந்துகளை தனியாகவோ அல்லது ஒன்றாக சேர்த்தோ கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால், இதயம் செயல்முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மருந்துகளும் முறையற்ற இதயதுடிப்பு, இதய செயலிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments