10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தற்போதைய சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அதைக் களைவதற்கான நடவடிக்கைகள், பிற மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுத வரக்கூடிய மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி, தேர்வு அறைகளை தூய்மையாக வைப்பது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, ஆசிரியர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உடை வழங்குவது, விடைத்தாள்களை திருத்தும் பணிகள், தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பன உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல எதிர்காலத்தில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments