ஊகானில் 9 நாட்களில் 65 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை
கொரோனாவின் ஊற்றுக்கண் என கூறப்படும் ஊகான் நகரில் கடந்த 9 நாட்களில் 65 லட்சம் பேருக்கு சோதனை நடத்தியுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு 76 நாட்கள் நீண்ட ஊரடங்கு விலக்கப்பட்ட ஊகானில், இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்த மாத துவக்கத்தில் ஊகானில் நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளில் ஒரு குடியிருப்பில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் பரவல் உறுதியானதை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மொத்தமுள்ள ஒரு கோடியே 10 லட்சம் பேரில், சுமார் 90 லட்சம் பேரிடம் இருந்து ஸ்வாப் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
Comments