"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பாலைவன வெட்டுக்கிளிகளால் ரூ.8000 கோடி மதிப்புள்ள பயிறு சாகுபடிக்கு ஆபத்து என எச்சரிக்கை
வட இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளி கூட்டத்தை அழிக்காவிட்டால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்படும் என வேளாண்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த வாரம் நுழைந்த வெட்டுக்கிளி கூட்டத்தை அழிக்க பல்வேறு ரசாயனங்களுடன் அரசுகள் தயார் நிலையில் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கனவே 16 மாவட்டங்களில் பயிர்கள் வெட்டுக்கிளிக்கூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளிகளை உடனே கட்டுப்படுத்தாவிட்டால் சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் அழிந்து விடும் என அஞ்சப்படுகிறது. உலக வெப்பமாயமாதலின் விளைவே வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
Comments