சின்னத்திரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கினாலும்,பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்புகள் தொடங்கும் - நடிகை குஷ்பு
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, 20 நபர்கள் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் செய்து, குறைந்தப்பட்சம் 60 நபர்கள் கொண்டு படபிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பு, சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அரசு அனுமதித்துள்ள போதிலும், படப்பிடிப்பு துவங்கவில்லை என்றார்.
Comments