தமிழக காவல்துறையின் CBCID டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிடமாற்றப்பட்டு புதிய CBCID டிஜிபியாக பிரதீப் வி பிலிப் நியமனம்
தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய டிஜிபியாக பிரதீப் வி பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவு பிரிவு ஐ.ஜி உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு சர்ச்சையில் சிக்கியதல் 2011லிருந்து பெரியளவில் முக்கியத்துவமில்லாத பதவிகளை வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், நீட் தேர்வு முறைகேடு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்ளிட்ட வழக்குகளை கையாண்டார்.
வரும் டிசம்பர் மாதத்துடன் ஜாபர் சேட் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் திடீரென அவர் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் வி பிலிப் 1987 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். FOP எனும் காவல்துறை நண்பன் திட்டம் இவர் அறிமுகப்படுத்தியதாகும்.
Comments