டெல்லியிலிருந்து பெங்களூர் வந்த தனக்கு மத்திய அமைச்சர் என்பதால் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக சதானந்த கவுடா விளக்கம்

0 2013

டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த தனக்கு மத்திய அமைச்சர் என்பதால் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக சதானந்த கவுடா விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோர் முதலில் 7 நாட்களுக்கு அரசின் தனிமைபடுத்தலுக்கும், பின்னர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைபடுத்தலுக்கும் உட்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லியிலிருந்து பெங்களூர் வந்த சதானந்த கவுடா, தனிமைபடுத்துதலுக்கு உட்படாமல் சென்றதால், சாதாரண மக்களுக்கு தான் விதிகளே தவிர அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து தான் மத்திய அமைச்சரென்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக சதானந்த கவுடா தெரிவித்த நிலையில், கர்நாடக அரசும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments