குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய வெண்டிலேட்டரை உருவாக்கி இந்தியா வம்சாவளி தம்பதி சாதனை

0 2765
குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய வெண்டிலேட்டரை உருவாக்கி இந்தியா வம்சாவளி தம்பதி சாதனை

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளி தம்பதியினர், குறைந்த செலவில் தயாரிக்கக் கூடிய வெண்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர்.

பீகாரை பூர்விகமாகக் கொண்ட தேவேஷ் ரஞ்சன், திருச்சி ஆர்இசி-யில் பயின்றவர். தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில், பொறியியல் கல்லூரியில் எந்திரப் பொறியியல் துறை பேராசிரியர். அவரது மனைவி குமுதா ரஞ்சன் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

கொரோனாவால் மருத்துவமனைகளில் சுவாச உதவிக் கருவியான வென்டிலேட்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறைந்த செலவில், விரைவாக தயாரிக்கும் வகையிலான வென்டிலேட்டர் கருவியை உருவாக்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் உருவாக்கியுள்ள வென்டிலேட்டரை 100 டாலர்கள் செலவில் தயாரிக்க முடியும் என்றும், 500 டாலர்கள் என விலை வைத்து விற்றாலே பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியும் என்றும், அதேசமயம் தாங்கள் உருவாக்கியுள்ளதைப் போன்ற வென்டிலேட்டரின் விலை சராசரியாக அமெரிக்க சந்தையில் 10 ஆயிரம் டாலர்கள் என்றும் தேவேஷ் ரஞ்சன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments