ஒரே ஆண்டில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் ஒரே ஆண்டில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தடேப்பள்ளியில், நம் ஆட்சியில் உங்கள் ஆலோசனை என்ற நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிகாரிகளுடன் காணொலியில் பேசினார். அப்போது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு தனித்தனியே செயலகங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 4 லட்சம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.
மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக மது அருந்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது எனக்கூறிய ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அரசுப்பணி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டதின் மூலம் அரசுக்கு 2 ஆயிரத்து 82 கோடி ரூபாய் செலவீனம் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Comments