உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கிய முதல்நாளிலேயே நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கிய முதல்நாளிலேயே நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து மேற்கு வங்கம், ஆந்திரா நீங்கலாக விமான சேவை நேற்று துவங்கியது. விமான சேவையை அனுமதித்த மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதனால் குறைந்த அளவிலான பயணிகளே வந்திருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 50 விமானங்கள் மட்டுமே இயக்கப்படவிருந்த மும்பை விமான நிலையத்தில் சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெரிய விமான நிலையங்கள் மட்டுமின்றி சிறிய விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திராவில் நாளை முதலும், மேற்கு வங்கத்தில் 28ம் தேதி முதலும் விமான சேவை துவங்கப்படவுள்ளது.
Comments