சென்னையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவுடன், கொரோனா நிலவரம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு நிறைவுக்கு வர உள்ள நிலையில், அடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டனர். மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்த வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள்-நெறிமுறைகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு வரும் ஞாயிறுடன முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்மாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments