பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.
வரும் கல்வி ஆண்டிற்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. வெளியூர்களில் உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது, தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். கூட்டத்துக்கு பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்றே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Comments