திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துக்களை விற்க ஆந்திர அரசு தடை
திருமலை -திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துக்களை விற்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விவசாய நிலங்கள், வீடு, காலி மனைகள் ஆகியவை குடியாத்தம், விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்வது என தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேவஸ்தானத்தின் இந்த முடிவிற்கு பக்தர்கள்,எதிர்கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தேவஸ்தான சொத்துகளை விற்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். பக்தர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Comments